பாகிஸ்தானிடம் பிடிபட்ட விமானி அபிநந்தனின் பெற்றோரிடம் பேசிய கமல்ஹாசன்


பாகிஸ்தானிடம் பிடிபட்ட விமானி அபிநந்தனின் பெற்றோரிடம் பேசிய கமல்ஹாசன்
x
தினத்தந்தி 28 Feb 2019 6:00 AM GMT (Updated: 28 Feb 2019 6:16 AM GMT)

பாகிஸ்தானிடம் பிடிபட்ட விமானி அபிநந்தனின் பெற்றோரிடம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய போர் விமானங்கள் விரட்டி சென்றபோது, ஒரு விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தது. இதனால் அதில் இருந்த சென்னையை சேர்ந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் பிடிபட்டார். விமானம் விழுந்த பகுதியில் இருந்தவர்களால் சுற்றி வளைத்து பிடிக்கப்பட்ட அவரை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மீட்டனர்.

இதுபற்றி பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் கூறுகையில், இந்திய போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதில் இருந்த விமானி தங்கள் காவலில் இருப்பதாகவும், ஜெனீவா மாநாட்டு ஒப்பந்தப்படி அவர் நடத்தப்படுவார் என்றும் கூறினார்.

அபிநந்தனை உடனடியாக மற்றும் பாதுகாப்புடன் திருப்பி ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி பாகிஸ்தான் வெளிவிவகாரத்துறையிடம், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், அபிநந்தனின் பெற்றோரிடம் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தொலைபேசி வழியே பேசினார்.  அவர்களிடம் அபிநந்தன் நலமுடன் இந்தியாவுக்கு திரும்பி வருவார் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

Next Story