ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரிய வழக்கு; 4ந்தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்


ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரிய வழக்கு; 4ந்தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்
x
தினத்தந்தி 1 March 2019 11:27 AM IST (Updated: 1 March 2019 11:33 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரிய வழக்கு விசாரணையை 4ந்தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை,

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

ஜெயலலிதாவுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் என்ற அடிப்படையில் உதவியாளர்கள், பணியாளர்கள், பாதுகாவலர்கள், சிகிச்சை அளித்தவர்கள் என்று ஒரு பட்டியல் தயாரித்து, அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

ஆணையத்தின் பதவி காலம் முடிவடைய இருந்த நிலையில், ஆணைய கோரிக்கையை ஏற்று ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவி காலம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு கடந்த 25ந்தேதி உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரி அப்பலோ மருத்துவமனை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.  இந்த வழக்கு விசாரணையை வருகிற 4ந்தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டு உள்ளது.

Next Story