பிரதமருக்கு எதிரான வைகோ போராட்டத்தில் கல்வீச்சு; போலீசார் தடியடி


பிரதமருக்கு எதிரான வைகோ போராட்டத்தில் கல்வீச்சு; போலீசார் தடியடி
x
தினத்தந்தி 1 March 2019 11:58 AM IST (Updated: 1 March 2019 11:58 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ தலைமையிலான போராட்டத்தில் நடந்த கல்வீச்சினை அடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.

நெல்லை,

பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திற்கு வருகிறார்.  இதனை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நலையில், தமிழகம் வரும் பிரதமருக்கு எதிராக ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தலைமையில் நெல்லை காவல் கிணறு பகுதியில் போராட்டம் நடந்து வருகிறது.  அக்கட்சி தொண்டர்கள் கருப்பு கொடி காட்டி வருகின்றனர்.  போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன.  இதனால் போலீசார் தடியடி நடத்தி கல்வீச்சில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.  கூடுதல் போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டு வருகின்றனர்.

Next Story