தே.மு.தி.க. விரைவில் தங்களது கூட்டணியில் இணையும்; தமிழிசை சவுந்தரராஜன்


தே.மு.தி.க. விரைவில்  தங்களது கூட்டணியில் இணையும்; தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 2 March 2019 6:59 AM IST (Updated: 2 March 2019 6:59 AM IST)
t-max-icont-min-icon

தே.மு.தி.க. விரைவில் தங்களது கூட்டணியில் இணையும் என தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியில் தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வுடன், பா.ஜ.க. மற்றும் பா.ம.க. இடம் பெற்றுள்ளன.  இந்த நிலையில், விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது.  இதில் சுமுக முடிவு எட்டப்படவில்லை.

இதனால் கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறுவதில் இழுபறி நீடித்து வருகிறது.  இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தே.மு.தி.க. விரைவில்  தங்களது கூட்டணியில் இணையும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், பிரதமர் மோடி வருகிற 6ந்தேதி பங்கேற்கும் கூட்டத்தில் விஜயகாந்தும் கலந்து கொள்வார் எனவும் தெரிவித்துள்ளார்.

Next Story