ஒரு கோழி ஒரு ஆண்டுக்கு எத்தனை முட்டை போடும்? - அமைச்சர் விஜயபாஸ்கர் நகைச்சுவை பேச்சு


ஒரு கோழி ஒரு ஆண்டுக்கு எத்தனை முட்டை போடும்? - அமைச்சர் விஜயபாஸ்கர் நகைச்சுவை பேச்சு
x
தினத்தந்தி 2 March 2019 7:05 PM IST (Updated: 2 March 2019 7:05 PM IST)
t-max-icont-min-icon

ஒரு கோழி ஒரு நாளைக்கு ஒரு முட்டை போட்டா ஒரு ஆண்டுக்கு எத்தனை முட்டை போடும் என பயனாளிகளிடம் அமைச்சர் விஜயபாஸ்கர்.நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார்.

சென்னை,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் மற்றும் நாட்டுக்கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், பேசும் போது, 

பயனாளிகளிடம் நகைச்சுவையாக, ஒரு கோழி ஒரு நாளைக்கு ஒரு முட்டை போட்டா ஒரு ஆண்டுக்கு எத்தனை முட்டை போடும் என்று கேள்வி எழுப்பினார். ஒரு பயனாளிகளுக்கு வழங்கப்படும் 50 கோழிக்குஞ்சுகள் மூலம் எவ்வுளவு வருமானம் கிடைக்கும் என்பதை நகைச்சுவையாக விளக்கினார்.  

Next Story