பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 15 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி எடப்பாடி பழனிசாமி உத்தரவு
தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகா, கக்கனூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகள் கவுசல்யா, மணி என்பவரின் மகள் மணிமொழி, சண்முகம் என்பவரின் மகள் பவதாரணி ஆகியோர் அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, பூனாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த தமிழரசன் என்பவரின் மனைவி சித்ரா நெல் அறுக்கும் எந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம், கங்கை கொண்டான் புறவழிச்சாலையில், மினிவேன், பேருந்துகள் மோதிய விபத்தில், பேருந்தில் பயணம் செய்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அம்சத்குமார், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், பிரவீன்ஜீவரூபி, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாஸ்கர், மதுரை மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தவசிமுத்து ஆகிய 6 பேர் இறந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகா, அரசு கவின் கலைக்கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த, தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தாலுகா, சின்னமலை கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்குமார் வட மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற இடத்தில் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தாலுகா, கீழையூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மகன் சரவணன் ரஷிய நாட்டு கடல் பகுதியில், கப்பல் தீப்பிடித்து எரிந்ததில் பலியானார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகா, மேலக்கொந்தை கிராமத்தை சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் ராஜவேல், தனது கூரை வீடு தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் தாலுகா எக்கியார்குப்பம் கிராமத்தை சேர்ந்த சந்தானகிருஷ்ணன் என்பவரின் மகன் மண்ணாங்கட்டி மீன் பிடிக்கச் சென்றபோது, கடலில் தவறி விழுந்து இறந்தார்.
மதுரை மாவட்டம் தெற்கு பெத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்த பரமேஸ்வரம் என்பவர் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார். இந்த துயர செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
பல்வேறு நிகழ்வுகளில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த 15 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் 15 நபர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Tags :
Next Story