மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு + "||" + 7 Layer Security for Chennai Airport

சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு

சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு
சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
சென்னை,

காஷ்மீரில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி துணை ராணுவ படையினர் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தீவிரவாதி வெடிகுண்டுகளை ஏற்றி வந்த காரை மோத செய்து வெடிக்க செய்ததில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து எல்லை பகுதியில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.  பாகிஸ்தான் விமான படை இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்று அது முறியடிக்கப்பட்டது.  எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி அந்நாட்டு ராணுவமும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு ரெட் அலர்ட் பாதுகாப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.  இதனால் இன்று முதல் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இதேபோன்று பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.  மறு உத்தரவு வரும் வரை இந்த பாதுகாப்பு தொடரும் என விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தாராபுரத்தில் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1¾ லட்சம் திருட்டு பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க முடியாததால் 53 பவுன் நகை தப்பியது
தாராபுரத்தில் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1¾ லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க முடியாததால் 53 பவுன்நகை தப்பியது.
2. மன்னார்குடியில் அயோடின் இல்லாத 10 ஆயிரத்து 40 கிலோ உப்பு மூட்டைகள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல்
மன்னா£ர்குடியில் அயோடின் இல்லாத 10 ஆயிரத்து 40 கிலோ உப்பு மூட்டைகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3. அரசு பள்ளிக்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி தரக்கோரி வகுப்பை புறக்கணித்து மாணவ– மாணவிகள் போராட்டம்
அரசூரில் அரசு பள்ளிக்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி தரக்கோரி வகுப்பை புறக்கணித்து மாணவ– மாணவிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் சட்டமன்ற தொகுதி பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன; கலெக்டர் ஆய்வு
வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனை கலெக்டர் வீரராகவராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
5. பாதுகாப்பு வழங்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் காதல் திருமண ஜோடி மனு
பாதுகாப்பு வழங்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் காதல் திருமண ஜோடி மனு.