தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக அ.தி.மு.க.வுடன் கூட்டணி; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி


தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக அ.தி.மு.க.வுடன் கூட்டணி; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி
x
தினத்தந்தி 4 March 2019 12:23 PM IST (Updated: 4 March 2019 12:23 PM IST)
t-max-icont-min-icon

தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி,

நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இடம் பெற்றுள்ளது.  இதற்காக தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

இதேபோன்று அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், புதுச்சேரி என்.ஆர். காங்கிரசுக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தே.மு.தி.க.வை இந்த கூட்டணியில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை.  தொடர்ந்து அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, பிரதமர் மோடி, முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் நாட்டின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை கொண்டு வருகின்றனர்.

அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் பா.ம.க. கூட்டணி அமைத்தது தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காகவே என்று கூறினார்.  கூட்டணியில் தே.மு.தி.க. இணைவது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story