சென்னை மாநகராட்சி பட்ஜெட்: ரூ.173 கோடி பற்றாக்குறை
சென்னை மாநகராட்சியில் 2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. அதில் வரும் நிதியாண்டில் ரூ.173 கோடி நிதி பற்றாக்குறை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் மார்ச் 15-ந்தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருந்தால் மாமன்ற கூட்டம் நடத்தப்பட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
தற்போது 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் சிறப்பு அதிகாரியான மாநகராட்சி ஆணையர் பட்ஜெட் தாக்கல் செய்வார்.
அதன்படி 2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ஆணையர் பிரகாஷ் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிதியாண்டில் வருவாய் வரவு ரூ.3 ஆயிரத்து 547 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.3 ஆயிரத்து 582 கோடியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் மூலதன வரவு ரூ.1,722 கோடியாகவும், மூலதன செலவு ரூ.1,860 கோடியாகவும் இருக்கும். இதன்படி பார்த்தால் மாநகராட்சியின் நிதி பற்றாக்குறை ரூ.173 கோடியாக இருக்கும்.
2018-2019-ம் நிதியாண்டில் வருவாய் வரவு ரூ.3,228.13 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.3,269.79 கோடியாக இருந்தது. இதைத் தவிர்த்து மூலதன வரவு ரூ.1,853 கோடியாகவும், மூலதன செலவு ரூ.1,985 கோடியாகவும் இருந்தது. தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளதால் மாநகராட்சியின் வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் சென்னையில் ரூ.2 ஆயிரம் கோடியில் ஒருங்கிணைந்த பார்க்கிங் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான நிதி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

Related Tags :
Next Story