இராமநாதபுரம் அருகே அதிகாலையில் வாகனங்கள் மோதல்: 2 பேர் பலி


இராமநாதபுரம் அருகே அதிகாலையில்  வாகனங்கள் மோதல்: 2 பேர் பலி
x
தினத்தந்தி 5 March 2019 8:21 AM IST (Updated: 5 March 2019 8:21 AM IST)
t-max-icont-min-icon

இராமநாதபுரம் அருகே மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

இராமநாதபுரம்,

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுலி அருகே மாநில நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்தில் சிக்கின. இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தில் சிக்கி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 21-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

காயமடைந்தவர்களுக்கு அருகாமையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை தொடர்ந்து அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story