பெண்களிடம் பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் தேடப்பட்ட நபர் கைது
பொள்ளாச்சியில் பேஸ்புக் மூலம் பெண்களிடம் பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் தேடப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த நாகேஸ்வரன் என்பவரது மகன் சபரிராஜன் (வயது 25). என்ஜினீயர். இவரும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியும் பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி அந்த மாணவியை சபரிராஜன் தொடர்பு கொண்டு ஊஞ்சவேலாம்பட்டிக்கு வருமாறு அழைத்தார்.
அங்கு சபரிராஜன் அவரது நண்பர்களான திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோருடன் காத்திருந்தார். பின்னர் மாணவி வந்ததும் அவரை காரில் ஏற்றிக் கொண்டு தாராபுரம் ரோட்டில் சென்றனர். சிறிது தூரம் சென்றதும் சபரிராஜன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதை சதீஷ் செல்போனில் படம் பிடித்தார். அந்த படத்தை காண்பித்து மாணவியிடம் பணத்தை கேட்டனர். அதற்கு அவர் என்னிடம் பணம் இல்லை என்றதும் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் நகையை பறித்தனர்.
பின்னர் மாணவியை காரில் இருந்து அவர்கள் இறக்கி விட்டு சென்றனர். இதற்கிடையில் மாணவியின் ஆபாச படத்தை வைத்து அவர்கள் 4 பேரும் மிரட்டி வந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி பெற்றோரிடம் நடந்ததை கூறினார். அதை தொடர்ந்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் மாணவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர்.
இதற்கிடையில் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக செந்தில் (33), பாபு (26), ஆச்சிபட்டி வசந்தகுமார் (26), ஜோதி நகர் பார் நாகராஜ் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் நாகராஜ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மணிவண்ணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
திருநாவுக்கரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய ஆடியோ வாட்ஸ்-அப்பில் வெளியானது. அதனை தொடர்ந்து அவர் நேற்று 2 வீடியோவை வெளியிட்டார். அவர் பேசிய வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஒரு வீடியோ 1.38 நிமிடமும், மற்றொரு வீடியோ 29 நிமிடமும் ஓடுகிறது. அதில் ஒரு வீடியோ பதிவில் அவர்,
எல்லாத்துக்கும் வணக்கம். நான் தான் திரு பேசுறேன். எவ்வளவு நாள் சுத்திகிட்டு இருக்கனும்னு தெரியல. நான் நாளை (இன்று) பொள்ளாச்சிக்கு வாரேன். கண்டிப்பாக என்னை போலீசார் கைது செய்வார்கள். பொள்ளாச்சி மக்களுக்கு ஒன்னே ஒண்ணு சொல்லிக்கிறேன். அந்த பொண்ணு கொடுத்த வழக்கு பொய்யான வழக்கு. அந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் கொடுக்க சொன்னேன். அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கல.
செய்யாத தப்புக்கு தயவு செய்து என்னை தண்டித்து விடாதீங்க. நல்ல முடிவாக சொல்லுங்க. தயவு செய்து வழக்கு கொடுத்த பொண்ண விசாரித்து பாருங்க. நான் அந்த பொண்ணுகிட்ட பேசுனது கூட கிடையாது. தயவு செய்து விசாரித்து பாருங்க என கூறி உள்ளார்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசை போலீசார் மாகினாம்பட்டியில் கைது செய்து உள்ளனர். திருநாவுக்கரசிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story