மக்களவை தேர்தல்: கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றுள்ளது; திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும்


மக்களவை தேர்தல்: கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றுள்ளது;  திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும்
x
தினத்தந்தி 5 March 2019 2:01 PM IST (Updated: 5 March 2019 3:46 PM IST)
t-max-icont-min-icon

திமுகவில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீடு நிறைவு பெற்றுள்ளது. மக்களவை தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

திமுக கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என ஒதுக்கீடு பணிகள் நிறைவு பெற்றது. 

காங்கிரஸ் -10, மதிமுக - 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி  - 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - 2, இந்திய கம்யூனிஸ்டு - 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே - 1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும், தி.மு.க. 20 தொகுதிகளிலும்  போட்டியிடும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மனிதநேய மக்கள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்பில்லை. 

எந்தெந்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறித்து நாளை மறுநாள் முதல் ஆலோசிக்கப்படும் என கூறினார்.

Next Story