தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு துவங்கியது


தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு துவங்கியது
x
தினத்தந்தி 6 March 2019 8:44 AM IST (Updated: 6 March 2019 10:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத்தேர்வு துவங்கியது. இத்தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

சென்னை,

பிளஸ் 1 பொதுத்தேர்வு  இன்று (மார்ச் 6 ) தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7,278 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவ-மாணவிகள், 5,032 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 650 பேர்புதிய பாடத்திட்டத்தில்  எழுதுகின்றனர். 

இதற்காக 2,914 தேர்வுமையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை நகரில் 410 பள்ளிகளில் இருந்து 156 மையங்களில் 47,305 மாணவ-மாணவிகள் தேர்வெழுதுகின்றனர்.  அதேபோல், புதுச்சேரியில் 149 பள்ளிகளைச் சேர்ந்த 14,985 மாணவ-மாணவிகள் 40 மையங்களில் தேர்வெழுதுகின்றனர்.

தேர்வு பணியில் 45 ஆயிரத்து 300 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களில் பார்வையிட 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.  தேர்வு மைய வளாகத்துக்குள் செல்போன் எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தேர்வுக்கூடத்தில் தேர்வர்கள் துண்டுத்தாள் வைத்திருத்தல், பார்த்து எழுத முயற்சி செய்தல், காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story