டிடிவி தினகரன் அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் அதிமுகவில் இணைந்தார்
டிடிவி தினகரன் அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
சென்னை
முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் அ.ம.மு.க.வில் இருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்குச் சென்ற அவர், தன்னை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்துக்கொள்ளக் கேட்டுக் கொண்டதையடுத்து, அவர் அ.தி.மு.க.வில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.
அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிணத்துக்கடவு தாமோதரன், பிரிந்து சென்ற அனைவரும் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Related Tags :
Next Story