எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியில் மாற்றமா?


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியில் மாற்றமா?
x
தினத்தந்தி 8 March 2019 3:45 AM IST (Updated: 8 March 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியில் மாற்றமா? என்ற நிருபர்கள் கேள்விக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில் அளித்தார்.

கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார்.

விடைத்தாள் திருத்துவதற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அன்று மாலையே தொகை வழங்கப்பட்டுவிடும். எனவே அரசு அறிவித்த தேதியில் பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இதில் எந்தவிதமான மாறுதலும் கிடையாது.

பள்ளிக்கல்வித்துறையை பொறுத்தமட்டில் வெறும் அறிவிப்புகள் மட்டுமே வெளியாகிறது. எந்த செயல்பாடும் இல்லை என தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பெரியசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். திருமணம் ஆனவுடன் குழந்தை பிறந்து விடாது. பள்ளிக்கல்வித்துறையில் ஒவ்வொரு நாளும் பல திட்டங்களை கொண்டு வருகிறோம். அதனுடைய செயல்பாடுகள் வரும் ஆண்டில்தான் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story