ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை 90% நிறைவு: சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தகவல்


ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை 90% நிறைவு: சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தகவல்
x
தினத்தந்தி 8 March 2019 6:12 PM IST (Updated: 8 March 2019 6:57 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 90 சதவீத விசாரணை முடிவடைந்துள்ளது. எந்த காரணங்களுக்காகவும் விசாரணை நிறுத்தப்படாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா,கிருஷ்ணன் ராமசாமி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது ஆறுமுகச்சாமி ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  இதுவரை 155 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், 90 சதவீத விசாரணை முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆணையம் இதுவரை நடத்திய விசாரணையில், அனைத்து ஆதாரங்களையும் பதிவு செய்திருப்பது அப்பல்லோ நிர்வாகத்திற்கு தெரியும் எனவும்,ஆணையம் இறுதி அறிக்கையை தாக்கல் செய்வதை  தடுக்கவே அப்பல்லோ தற்போது வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் எந்த காரணங்களுக்காகவும் ஆணையம், தனது விசாரணையை நிறுத்தாது எனவும் ஆணையம் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டது. 

இதனையடுத்து, வழக்கு விசாரணை மார்ச் 12 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Next Story