ரூ.6 ஆயிரம் நிதி உதவி திட்டம்: தமிழக விவசாயிகளுக்கு ரூ.280 கோடி வழங்கப்பட்டது 14 லட்சம் பேர் பயன்பெற்றனர்
ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ.280 கோடி வழங்கப்பட்டது. இதன் மூலம் 14 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
சென்னை,
ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ.280 கோடி வழங்கப்பட்டது. இதன் மூலம் 14 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
ரூ.6 ஆயிரம் நிதி உதவி
கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 3 தவணைகளில் தலா ரூ.2 ஆயிரம் விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 24-ந் தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த விழாவில், விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
ரூ.280 கோடி
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு 7-ந் தேதி வரை, தமிழ்நாட்டில் 69 லட்சத்து 50 ஆயிரத்து 650 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இதில் இதுவரை 27 லட்சத்து 19 ஆயிரத்து 70 விவசாயிகளின் பெயர் விவரம் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
14 லட்சத்து 1,382 விவசாயிகளின் வங்கி கணக்கில் தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.280 கோடியே 27 லட்சத்து 64 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது. பதிவேற்றம் செய்யும் விவசாயிகள் வங்கி கணக்கில் முதல் தவணையாக தலா ரூ.2 ஆயிரம் வரவு வைக்கும் பணியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.
Related Tags :
Next Story