அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்களால் தமிழகத்திற்கு என்ன பயன் கிடைத்தது என்ற பிரேமலதாவின் பேச்சு ஏற்க முடியாதது: அமைச்சர் ஜெயக்குமார்
தே.மு.தி.க.வுடனான கூட்டணி குறித்து விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை,
அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“ அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்களால் தமிழகத்திற்கு என்ன பயன் கிடைத்தது என்ற பிரேமலதாவின் பேச்சு ஏற்க முடியாதது. தே.மு.தி.க. விவகாரத்தில் மென்மையான போக்கை கடைபிடிக்கவில்லை. கடுமையாக விமர்சித்தாலும் மறப்போம், மன்னிப்போம் என்பதே எங்களின் கொள்கை .
மத்திய ஆட்சியில் பங்கேற்றால் தான் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க முடியும். தே.மு.தி.க.வுடனான கூட்டணி குறித்து விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதாலேயே தலைமை செயலகத்தில் முதல்வரை கே.சி.பழனிசாமி சந்தித்தார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் ஒருமையில் பேசியதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.” இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story