மக்களவை தேர்தலில் தொகுதிகளை இறுதி செய்ய காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. மீண்டும் அழைப்பு


மக்களவை தேர்தலில் தொகுதிகளை இறுதி செய்ய காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. மீண்டும் அழைப்பு
x
தினத்தந்தி 9 March 2019 11:10 AM GMT (Updated: 2019-03-09T16:40:39+05:30)

மக்களவை தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச்சு.வார்த்தைக்கு வருமாறு காங்கிரஸ் கட்சியை மீண்டும் தி.மு.க. அழைத்துள்ளது.

சென்னை,

அண்ணா அறிவாலயத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுக-காங்கிரஸ் இடையே இன்று காலையில் பேச்சு வார்த்தை நடைப்பெற்றது.

தி.மு.க.வுடன்  நடந்த பேச்சு வார்த்தை குறித்து, கட்சி மேலிடத்திற்கு தெரிவித்துள்ளதாக   காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி மேலிடம் கூறும் கருத்தின் அடிப்படையில் மீண்டும் தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை  நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தொகுதிகளை இறுதி செய்ய காங்கிரசுடன் பேச்சு வார்த்தை நடத்த தற்போது  மீண்டும் திமுக அழைப்பு விடுத்துள்ளது. 

புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதியான நிலையில் தமிழகத்தில் 9 தொகுதிகளில் எவை என்பது தெரிய வாய்ப்பு உள்ளது.  காங்கிரஸ் எந்த எந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்ற விவரம்  இன்று மாலைக்குள் வெளியாக வாய்ப்பு உள்ளது. Next Story