டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார் - பிரபல பாடகர் மனோ


டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார் - பிரபல பாடகர் மனோ
x
தினத்தந்தி 9 March 2019 11:55 AM GMT (Updated: 2019-03-09T17:25:27+05:30)

பிரபல பாடகர் மனோ, டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார்.

தமிழக அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வியூகங்கள் வகுத்து வெற்றி பெறுவதற்காக தொடர்ந்து ஆலோசனைகளை  மேற்கொண்டு வருகிறது. 

இதற்காக  கூட்டணி, வேட்பாளர் தேர்வு என தொடர்ந்து தேர்தல் பணிகளில் ஈடுப்பட்டுவருகின்றது. இந்நிலையில், டிடிவி தினகரன் கட்சி எந்தவித ஆரவாரமுமின்றி அமைதியாக காணப்படுகிறது.

ஏற்கனவே திமுக, அதிமுக கூட்டணியை விமர்சித்து வரும் அமமக, நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று கூறி வருகிறது. இதனைதொடர்ந்து அதிமுக பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்ததை விரும்பாத நடிகர் ரஞ்சித் பாமகவிலிருந்து விலகி சில நாள்களுக்கு முன்பு அமமுகவில் இணைந்தார். 

இந்த நிலையில், சென்னையில் பிரபல பாடகர் மனோ டிடிவி தினகரன் முன்னிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாடகர் மனோ தமிழ், தெலுங்கு, கன்னடம் என 25,000 பாடல்கள், 25,000 பக்திப் பாடல்கள் என 50,000 பாடல்கள் பாடியுள்ளார். மேலும் தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் ஆந்திர அரசின் நந்தி விருது, ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story