நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு, மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு -ஜவாஹிருல்லா அறிவிப்பு


நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு, மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு -ஜவாஹிருல்லா அறிவிப்பு
x
தினத்தந்தி 9 March 2019 8:58 PM IST (Updated: 9 March 2019 8:58 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு, மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

சென்னை,

விழுப்புரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு பின் ஜவாஹிருல்லா கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு, மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும். 21 தொகுதி இடைத்தேர்தலில் எங்களுக்கான இடங்களை கேட்டு திமுகவிடம் வலியுறுத்துவோம் என்றார். 

திமுக கூட்டணியில் தங்களுக்கு சீட் தராதது வருத்தம் தருவதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story