கூடுதல் டி.ஜி.பி.க்கள் 5 பேருக்கு பதவி உயர்வு சைலேந்திரபாபு டி.ஜி.பி. ஆனார்
தமிழக காவல் துறையில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.க்கள் 5 பேர் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். சைலேந்திரபாபு டி.ஜி.பி. ஆனார்.
சென்னை,
தமிழக காவல் துறையில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.க்கள் 5 பேர் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். சைலேந்திரபாபு டி.ஜி.பி. ஆனார்.
5 பேருக்கு பதவி உயர்வு
தமிழக காவல் துறையில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.க்கள் 5 பேர் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை நேற்று தமிழக அரசு பிறப்பித்தது. பதவி உயர்வு பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
* ரெயில்வே கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் ரெயில்வே டி.ஜி.பி.யாக பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை கூடுதல் டி.ஜி.பி. கரன் சின்ஹா டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் அதே துறையில் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விஜயகுமார்
* சிவில் சப்ளை சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. பிரதீப் வி.பிலிப் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று அதே துறையில் தொடர்வார்.
* போலீஸ் பயிற்சி கூடுதல் டி.ஜி.பி. ஆர்.சி.குடவாலா டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அதே துறையில் டி.ஜி.பி.யாக பணியாற்றுவார்.
* சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி வகிக்கும் விஜயகுமார் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் தமிழக சட்டம்-ஒழுங்கு பிரிவு சிறப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
15 டி.ஜி.பி.க்கள்
தமிழகத்தில் தற்போது டி.கே.ராஜேந்திரன், திரிபாதி, ஜாங்கிட், காந்திராஜன், ஜாபர் சேட், லட்சுமி பிரசாத், தமிழ்ச்செல்வன், ஆசிஷ் பெங்ரா, எம்.கே. ஜா, அசுதோஷ் சுக்லா ஆகிய 10 பேர் டி.ஜி.பி.க்களாக பதவியில் உள்ளனர்.
தற்போது 5 பேர் டி.ஜி.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக காவல் துறையில் முதல்முறையாக 15 பேர் டி.ஜி.பி. பதவியை அலங்கரிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் டி.கே.ராஜேந்திரன் தலைமை டி.ஜி.பி. என்று அழைக்கப்படுவார்.
Related Tags :
Next Story