திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து நாளை இரவுக்குள் அறிவிக்கப்படும் - மு.க.ஸ்டாலின் பேட்டி


திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து நாளை இரவுக்குள் அறிவிக்கப்படும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 11 March 2019 7:36 AM GMT (Updated: 11 March 2019 7:36 AM GMT)

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று இரவு அல்லது நாளை இரவுக்குள் அறிவிக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மக்களவைத்தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும். 

திமுக கூட்டணியில் காங்கிரஸ்,விசிக தவிர மற்ற கட்சிகளுக்கு தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு விட்டன. திமுக கூட்டணியில் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் இன்று அல்லது நாளை இரவுக்குள் அறிவிக்கப்படும்.

விடுபட்ட அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்.

 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தாதது தொடர்பாக திமுக எம்.பி.க்கள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்க உள்ளனர். 

3 தொகுதிகளில் இடைத்தேர்தலை அறிவிக்காததில் தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் செயல்பட கூடாது.

வழக்குகளை காரணம் காட்டி தேர்தல் அறிவிக்கப்படவில்லை என கூறுவதில் எந்த முகாந்திரமும் இல்லை.  21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவதே நியாயம்.

இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story