பொள்ளாச்சி பயங்கர சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் வெளியேற்றம்
பொள்ளாச்சி பாலியல் பயங்கர சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்கள் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். இன்று பொள்ளாச்சியில் அனைத்து கல்லூரி மாணவர்களும் காலையில் இருந்து போராட்டம் நடத்தினர்.
நூற்றுக்கணக்கான மாணவர்கள், மாணவிகள் குவிந்து போராட்டம் மேற்கொண்டனர். போராட்டத்தின் போது பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாணவிகளும், மாணவர்களும் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய மாணவர்களை போலீஸ் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. மாணவிகள் போராட்டம் நடத்திய மாணவர்களை சுற்றிலும் வேலி அமைத்து போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை வெளியேற்ற போலீஸ் நடவடிக்கையை மேற்கொண்டு வெளியேற்றியது. மாணவிகள் சிலர் அப்பகுதியில் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story