நீர்நிலைகளை தூர்வாருங்கள்; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


நீர்நிலைகளை தூர்வாருங்கள்; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 13 March 2019 6:51 PM IST (Updated: 13 March 2019 6:51 PM IST)
t-max-icont-min-icon

நீர்நிலைகளை தூர்வாருங்கள் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் அனைத்து வளங்கள் இருந்தும் அதை பாதுகாக்க அதிகாரிகள் தவறியதால் பிற மாநிலங்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் கூறும்பொழுது, மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்திய போது நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது மில்லியன் டாலர் கேள்வி என கூறியதுடன், தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாருங்கள் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

Next Story