பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகள் அதிகரிப்பு


பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகள் அதிகரிப்பு
x
தினத்தந்தி 14 March 2019 12:54 AM GMT (Updated: 2019-03-14T06:24:34+05:30)

பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகள் உயர்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 5 காசுகள் குறைந்துள்ளது.

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 

இந்த நிலையில்,  எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ..75.27 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.71.15 காசுகளாகவும் உள்ளது.


Next Story