முதல் முறையாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு பிற்பகலில் தொடங்கியது


முதல் முறையாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு பிற்பகலில் தொடங்கியது
x
தினத்தந்தி 14 March 2019 9:51 AM GMT (Updated: 14 March 2019 9:51 AM GMT)

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதல் முறையாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு பிற்பகலில் தொடங்கி உள்ளது.

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதல் முறையாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு பிற்பகலில் தொடங்கி உள்ளது. தமிழ், ஆங்கிலம் தேர்வுகள் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 4.45 மணி வரை நடைபெறுகிறது.

இன்று முதல் 29-ம் தேதி வரை 13,731 மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

சிறை கைதிகள் 152 பேர் புழல், திருச்சி,பாளையங்கோட்டை, கோவை சிறையில் உள்ள மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். 

 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வர்கள் 38,176 பேர் எழுத உள்ளனர்.  மொத்தம் 12,546 பள்ளிகளில் இருந்து 9,59,619  பேர்  10-வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

Next Story