மாநில செய்திகள்

பொள்ளாச்சி சம்பவம் :கைது செய்யப்பட்ட சபரிராஜன் வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு + "||" + Pollachi incident: The arrested Sabarirajan house CBCID officials check

பொள்ளாச்சி சம்பவம் :கைது செய்யப்பட்ட சபரிராஜன் வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு

பொள்ளாச்சி சம்பவம் :கைது செய்யப்பட்ட சபரிராஜன் வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு
பொள்ளாச்சி வழக்கில் கைது செய்யப்பட்ட சபரிராஜன் வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை,

பொள்ளாச்சி  பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள் வீட்டில் மூன்றாவது நாளாக சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள் பலாத்கார சம்பவத்தை ஒளிப்பதிவு செய்ததாக கருதப்படும் வீட்டின் தரை தளம் மற்றும் சுவர் போன்றவற்றை வீடியோவுடன் ஒப்பிட்டு தடயங்களை சேகரித்தனர்.

அதைத்தொடர்ந்து நேற்று திருநாவுக்கரசு தற்போது குடியிருக்கும் ஜோதி நகர் பகுதியில் உள்ள காந்திநகர் வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சபரிராஜன் வீட்டிற்கு நேற்று விசாரணைக்காக சென்ற போது வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டின் முன்பாக நோட்டீஸ் ஒட்டிவிட்டு திரும்பி வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை முதலே பொள்ளாச்சியை அடுத்த ஜோதிநகரில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.காலனியில் சபரிராஜனின் வீடு அமைந்துள்ள பகுதி காவல்துறையினரின் பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டது.

பின் பிற்பகல் 12.45 மணியளவில் இன்று சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை