ராகுல்காந்தியை விமர்சிக்க அனைத்து தகுதியும் உள்ளது - கே.எஸ்.அழகிரி கேள்விக்கு தமிழிசை பதிலடி
ராகுல் காந்தியை விமர்சிக்க தமக்கு அனைத்து தகுதிகளும் இருப்பதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவரின் கேள்விக்கு பதிலளித்துள்ள தமிழிசை, நேரு குடும்ப வாரிசு என்ற ஒரே தகுதியை கொண்டதால், ராகுல் காந்திக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
யாரிடமும் சிபாரிசு கோராமல் அரசியலை சுயபுத்தியுடன் பகுத்தாய்ந்து, பாதை வகுத்து சொந்தக்காலில் நின்று அடிமட்ட தொண்டராய் படிப்படியாக தாம் உயர்ந்துள்ளதாகவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய குடிமகள், தமிழ்நாட்டு பிரஜை என்ற முறையில் தமக்கு எல்லாம் தகுதிகளும் உண்டு என்பது, கே.எஸ்.அழகிரிக்கு புரியாவிட்டாலும் மக்களுக்கு நன்றாக புரியும் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story