சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தனி சின்னத்தில் திருமாவளவன் போட்டி
பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
சென்னை,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பிடித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 2 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த இரண்டு தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் தொகுதியில் தொல் திருமாவளவன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. சிதம்பரத்தில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story