மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் 3 மணிக்கு வெளியாக வாய்ப்பு


மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் 3 மணிக்கு வெளியாக வாய்ப்பு
x
தினத்தந்தி 17 March 2019 11:50 AM IST (Updated: 17 March 2019 11:50 AM IST)
t-max-icont-min-icon

மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் 3 மணிக்கு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு 5, பா.ம.க.வுக்கு 7, தே.மு.தி.க.வுக்கு 4, த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இன்று காலை அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டிலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்  வெளியிட்டார்.  அதில் அதிமுக 20  தொகுதிகளில் போட்டியிடுகிறது.  இதில், 8 தொகுதிகளில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக மோதுகின்றன. 

இந்நிலையில்,  மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story