அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு


அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 17 March 2019 5:12 PM GMT (Updated: 17 March 2019 5:12 PM GMT)

மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. #AIADMK

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு 5, பா.ம.க.வுக்கு 7, தே.மு.தி.க.வுக்கு 4, த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இன்று காலை அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டிலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்  வெளியிட்டார்.  அதில் அதிமுக 20  தொகுதிகளில் போட்டியிடுகிறது.

18 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் சிக்கல் நீடித்ததால், அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் மக்களவை தேர்தல், இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த ஆலோசனை நிறைவு பெற்றதை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.


மக்களவை தேர்தல் வேட்பாளர் பட்டியல்

தென் சென்னை - ஜெயவர்தன்

திருவள்ளூர் (தனி) - டாக்டர் P வேணுகோபால்

காஞ்சிபுரம் (தனி) - மரகதம் குமரவேல்

கிருஷ்ணகிரி - கே.பி முனுசாமி

திருவண்ணாமலை - அக்ரி கிருஷ்ணமூர்த்தி

ஆரணி - செஞ்சி ஏழுமலை

சேலம் - KRS சரவணன்

நாமக்கல் - P.காளியப்பன்

ஈரோடு - G.வெங்கு(எ)மணிமாறன்

திருப்பூர் - M.S.M ஆனந்தன்

நீலகிரி (தனி) - M. தியாகராஜன்

பொள்ளாச்சி - C. மகேந்திரன்

கரூர் - M. தம்பிதுரை

பெரம்பலூர் - N.R. சிவபதி

சிதம்பரம் (தனி) - சந்திரசேகர்

மயிலாடுதுறை - S.ஆசைமணி

நாகப்பட்டினம் (தனி) - சரவணன்

மதுரை - VVR ராஜ்சத்யன்

தேனி - ரவீந்திரநாத் குமார்

நெல்லை - மனோஜ் பாண்டியன்


18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பட்டியல்



பூந்தமல்லி - G வைத்தியநாதன்

பெரம்பூர் - RS ராஜேஷ்

திருப்போரூர் - S ஆறுமுகம்

சோளிங்கர் - G சம்பத்

குடியாத்தம் - கஸ்பா R மூர்த்தி

ஆம்பூர் - J ஜோதிராமலிங்க ராஜா

ஒசூர் - S ஜோதி

பாப்பிரெட்டிபட்டி - A கோவிந்தசாமி

அரூர் - V சம்பத் குமார்

நிலக்கோட்டை - S தேன்மொழி

திருவாரூர் - R ஜீவானந்தம்

தஞ்சாவூர் - R காந்தி

மானாமதுரை - S நாகராஜன்

ஆண்டிப்பட்டி - A லோகிராஜன்

பெரியகுளம் - M முருகன்

சாத்தூர் - MSR ராஜவர்மன்

பரமக்குடி - N சதன் பிரபாகர்

விளாத்திகுளம் - P சின்னப்பன்


Next Story