பா.ம.க. முதல் பட்டியல் வெளியீடு: தர்மபுரி தொகுதியில் மீண்டும் அன்புமணி ராமதாஸ் போட்டி 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு
பா.ம.க. வேட்பாளர்கள் முதல் பட்டியல் நேற்று இரவு வெளியானது. தர்மபுரி தொகுதியில் மீண்டும் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். முதல் பட்டியலில் 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க. வுக்கு 7 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் வழங்கப்பட்டுள்ளது.
பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் நேற்று காலை அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியான சில நிமிடங்களிலேயே பா.ம.க. வேட்பாளர்கள் முதல் பட்டியலும் வெளியிடப்பட்டது. முதல் பட்டியலில் 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் கள் அறிவிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் வரும் 18-4-2019 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர் தலில், அ.தி.மு.க. தலைமை யிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 5 தொகுதிகளில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் அறிவிக்கப்படுகிறது. தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
தர்மபுரி - டாக்டர் அன்புமணி ராமதாஸ். விழுப்புரம் - வடிவேல் ராவணன். கடலூர் - டாக்டர் இரா.கோவிந்தசாமி. அரக்கோணம் - ஏ.கே.மூர்த்தி. மத்திய சென்னை - சாம் பால். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்புமணி ராமதாஸ் மீண்டும் அதே தொகுதியில் வேட்பாளராக களம் காண்கிறார்.

Related Tags :
Next Story