மக்களவை தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு, கள்ளக்குறிச்சியில் சுதீஷ் போட்டி
மக்களவை தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு, கள்ளக்குறிச்சி, திருச்சி, சென்னை (வடக்கு), விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மக்களவைத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கவும் தேமுதிக ஒப்புக்கொண்டுள்ளது.
தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இன்று விஜயகாந்த் வெளியிட்டார். இதன்படி, கள்ளக்குறிச்சி தொகுதியில் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். திருச்சி தொகுதியில் இளங்கோவன், விருதுநகரில் அழகர்சாமி, வடசென்னை தொகுதியில் மோகன்ராஜ் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story