ஒப்பந்த ஆவணங்கள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்

ஒப்பந்த ஆவணங்கள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்
x
தினத்தந்தி 19 March 2019 12:30 AM IST (Updated: 19 March 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவு இடங்களில் துப்புரவு, தோட்ட பராமரிப்பு, பிளம்பர், எலக்ட்ரீசியன் பணிகளுக்கு 54 பேரை நியமனம் செய்ய செய்தி மக்கள் தொடர்புத்துறை தனியாரிடம் டெண்டர் விடுவதற்கான அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை, 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவு இடங்களில் துப்புரவு, தோட்ட பராமரிப்பு, பிளம்பர், எலக்ட்ரீசியன் பணிகளுக்கு 54 பேரை நியமனம் செய்ய செய்தி மக்கள் தொடர்புத்துறை தனியாரிடம் டெண்டர் விடுவதற்கான அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்த கடிதங்கள், ஆவணங்கள் அனைத்தும் ஆங்கில மொழியிலேயே இருக்க வேண்டும் என்றும், அவைகள் தமிழில் இருந்தால் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு மொழி பெயர்த்து அளிக்காத டெண்டர் ஆவணங்கள் நிராகரிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதுவன்மையான கண்டனத்திற்கு உரியது. அரசின் இந்த அறிவிப்பு திருத்தம் செய்யப்பட்டு, தமிழ் மொழியிலேயே இந்தப் பணிகளுக்கான ஒப்பந்த அறிவிப்புக்கள் அமைந்திடவும், தமிழ் மொழியிலேயே ஆவணங்களை அளிக்க வேண்டும் என்றும் அரசு உடனடியாக மறு அறிவிப்பு செய்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story