தே.மு.தி.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு விஜயகாந்த் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர்கள் பட்டியலை விஜயகாந்த் அறிவித்து உள்ளார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர்கள் பட்டியலை விஜயகாந்த் அறிவித்து உள்ளார். இதில் கள்ளக்குறிச்சி தொகுதியில் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார்.
விஜயகாந்த் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க .வுக்கு விருதுநகர், வடசென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த தொகுதிகளில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:-
வேட்பாளர்கள்
கள்ளக்குறிச்சி - எல்.கே.சுதீஷ்,
வடசென்னை - அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ்,
விருதுநகர் - ஆர்.அழகர்சாமி,
திருச்சி - டாக்டர் வி.இளங்கோவன்.
வாழ்த்து
வேட்பாளர்கள் 4 பேரும் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ் கட்சியின் துணை செயலாளராக பதவி வகிக்கிறார். இவர் விஜயகாந்தின் மைத்துனர் ஆவார். இவர் ஏற்கனவே 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் (குடியாத்தம் தொகுதி), 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் முறையே கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வடசென்னை தொகுதி வேட்பாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக உள்ளார். இவர் 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் (சேலம்) போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.
திருச்சி தொகுதி வேட்பாளர் டாக்டர் வி.இளங்கோவன், கட்சியின் அவைத்தலைவராக உள்ளார். இவர் 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் (தர்மபுரி), 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் (தர்மபுரி) போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
விருதுநகர் தொகுதி வேட்பாளர் ஆர்.அழகர்சாமி, கட்சியின் விசாரணைக்குழு உறுப்பினராக உள்ளார்.
Related Tags :
Next Story