வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை -தி.மு.க தேர்தல் அறிக்கை


வேளாண்துறைக்கு தனி பட்ஜெட்  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை -தி.மு.க தேர்தல் அறிக்கை
x
தினத்தந்தி 19 March 2019 5:28 AM GMT (Updated: 19 March 2019 5:28 AM GMT)

நாடாளுமன்றத்தில் வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

சென்னை,

மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-

 பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பொருளாதாரமும் சரிந்துள்ளது.

 தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழில் செயல்பட, தமிழை இணை ஆட்சி மொழியாக அங்கீகரிக்க சட்டத்திருத்தம்.

* மத்திய அரசின் வரி வருவாயில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.

* வேளாண்துறைக்கு தனி  நிதி நிலை அறிக்கை

* மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும்.

* குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை ரூ.8 ஆயிரமாக நிர்ணயிக்கப்படும்.

* மருத்துவத்திற்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

* சிலிண்டர் மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டு, சிலிண்டர் விலை குறைக்கப்படும்.

* அண்மையில் உயர்த்தப்பட்ட  கேபிள் கட்டணம் குறைக்கப்படும்.

* தமிழகத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை  எடுக்கப்படும்.

*  ஏழைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.

* மாணவர்களின் கல்வி கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரை, திருச்சி, கோவை, சேலம் மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

* கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரப்படும், அருங்காட்சியகமும் அமைக்கப்படும்.

* பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வலியுறுத்தப்படும். 

* புயல் பாதிப்பு பகுதியில் நிரந்த வீடு கட்டிதரப்படும்.

Next Story