மாநில செய்திகள்

சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பயங்கரம்: நீதிபதியின் முன்பே மனைவியை கத்தியால் குத்திய கணவன் + "||" + Terror in Chennai Family Welfare Court Husband who stabbed his wife before the judge

சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பயங்கரம்: நீதிபதியின் முன்பே மனைவியை கத்தியால் குத்திய கணவன்

சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பயங்கரம்: நீதிபதியின் முன்பே மனைவியை கத்தியால் குத்திய கணவன்
சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது நீதிபதியின் முன்பே மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை

சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்காக நீதிபதி கலைவாணன் முன்பு சரவணன் மற்றும் அவரது மனைவி வரலட்சுமி ஆகியோர் ஆஜராகினார்.

அப்போது சரவணன் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில்  நீதிபதி முன்பே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு மனைவி வரலட்சுமியை கடுமையாக குத்தினார். 

இதனையடுத்து உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சரவணனை பிடித்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. 

இதனிடையே மனைவி வரலட்சுமி தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் போலீசார்  சரவணனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


அதிகம் வாசிக்கப்பட்டவை