ஓட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கு: டாக்டர் கிருஷ்ணசாமி வாபஸ் பெற்றார்
ஓட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இந்த 3 தொகுதிகளுக்கு மட்டும் தற்போதைக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது. மற்ற 18 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில். ஓட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவை ஏற்று வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. வழக்கு வாபஸ் குறித்து உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்க சென்னை ஐகோர்ட் பதிவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வரும் ஏப்ரல் 18-ம் தேதி மற்ற தொகுதிகளோடு ஓட்டப்பிடாரம் தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story