படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவர முடியும் -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவர முடியும் -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
x
தினத்தந்தி 20 March 2019 9:49 AM GMT (Updated: 2019-03-20T15:19:19+05:30)

தமிழகத்தில் படிப்படியாகத் தான் மதுவிலக்கு கொண்டுவர முடியும் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதியாகும். அதிமுகவில் முதல்வர், துணை முதல்வர் இடையே எந்தவித மோதலும் இல்லை. இந்த தேர்தல் முதல்வர் பழனிசாமியின் அரசியல் அஸ்திவாரத்தை பலப்படுத்தும் தேர்தலாக அமையும்.

குடிமக்களின் நலனுக்காக படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும். ராஜகண்ணப்பன், வேறு ஒரு கட்சிக்கு ஆதரவு என்று போய்விட்டதால், அதிமுகவுக்கு எந்த வித இழப்பும் இல்லை.

இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

Next Story