மாநில செய்திகள்

அ.ம.மு.க.வின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் 22ந்தேதி வெளியீடு + "||" + The list of candidates for the second phase of the AMMK is on 22nd

அ.ம.மு.க.வின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் 22ந்தேதி வெளியீடு

அ.ம.மு.க.வின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் 22ந்தேதி வெளியீடு
அ.ம.மு.க.வின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் 22ந்தேதி வெளியிடப்படும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை,

தஞ்சையில், சசிகலாவின் கணவர் மறைந்த ம. நடராசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று நடந்தது.  இதில், அ.ம.மு.க.வின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வின் ஓர் அணி என்று எங்களை நீதிமன்றமே கூறி இருக்கிறது என்றும் அதற்காகத்தான் நாங்கள் போராடி வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

வருகிற 22ந்தேதி அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் குறித்து அறிவிக்க உள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார்.  வருகிற 25ந்தேதி நாங்கள் எதிர்பார்த்த சின்னம் தங்களுக்கு கிடைக்கும் என்றும் ஆர்.கே. நகரை போல, வரும் தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்றும் தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.