கோவை: சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
கோவை
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ்( வயது 64) மாரடைப்பால் மரணம் அடைந்தார். இன்று காலை நாளிதழ் படித்துக்கொண்டு இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த கனகராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, சுல்தான்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். கனகராஜுக்கு ரத்தினம் என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே 21 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கனகராஜ் எம்.எல்.ஏ மறைவு மூலம் தமிழக சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், சுமார் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கனகராஜ் வெற்றி பெற்று இருந்தார்.
Related Tags :
Next Story