மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் சுப்பிரமணியசாமி பேட்டி
தமிழகத்தில் மறுமலர்ச்சியை கொண்டுவருவது அவசியம். அதை அ.தி.மு.க., தி.மு.க.வால் கொண்டுவர முடியாது.
ஆலந்தூர்,
சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மறுமலர்ச்சியை கொண்டுவருவது அவசியம். அதை அ.தி.மு.க., தி.மு.க.வால் கொண்டுவர முடியாது. பா.ஜ.க.வால் தான் முடியும். பா.ஜ.க. தனியாக நின்று இருந்தால் பிரசாரம் செய்து இருப்பேன். கூட்டணி கட்சிகள் சொல்வதை எல்லாம் ஏற்க முடியாது.
மத்தியில் பா.ஜ.க. மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் பெற்ற 5 தொகுதிகள் தான் மீண்டும் பெற்று உள்ளனர். பா.ஜ.க. தொண்டர்கள் போட்டியிட வாய்ப்பு தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story