எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு சற்று கடினம் மாணவ–மாணவிகள் வேதனை


எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு சற்று கடினம் மாணவ–மாணவிகள் வேதனை
x
தினத்தந்தி 22 March 2019 5:15 PM GMT (Updated: 22 March 2019 5:15 PM GMT)

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 14–ந் தேதி தொடங்கியது.

சென்னை, 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 14–ந் தேதி தொடங்கியது. இதுவரை தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வும், ஆங்கிலம் முதல் தாள் தேர்வும் நடைபெற்று முடிந்து இருக்கிறது.

இதில் தமிழ் பாட தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ–மாணவிகள் தெரிவித்தனர். கடந்த 20–ந் தேதி நடந்த ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எளிதாகவே இருந்தது. இந்த நிலையில் ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு இன்று நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மாலை 4.45 மணிக்கு நிறைவடைந்தது.

ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வை பொறுத்தவரை சற்று கடினமாகவே இருந்ததாக மாணவ–மாணவிகள் தெரிவித்தனர். பல வினாக்கள் யோசித்து பதில் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும், பாடப்பிரிவுகளின் உள் பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதாகவும், இதுவரைக்கும் கேட்கப்படாத வினாக்கள் கேட்டு இருந்ததாகவும் மாணவ–மாணவிகள் வருத்தத்துடன் கூறினர்.

எஸ்.எஸ்.எல்.சி. விருப்ப பாடத்தேர்வு 23–ந் தேதியும் (சனிக்கிழமை), கணிதம் தேர்வு 25–ந் தேதியும்(திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

Next Story