மாநில செய்திகள்

சென்னையில் 3 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனுதாக்கல் + "||" + naam tamilar party Candidates nominated

சென்னையில் 3 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனுதாக்கல்

சென்னையில் 3 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனுதாக்கல்
நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அதன்படி நாம் தமிழர் கட்சி சார்பில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு காளியம்மாள், மத்திய சென்னை தொகுதிக்கு டாக்டர் கார்த்திகேயன் வேட்புமனுவை அளித்தனர். தென்சென்னை தொகுதிக்கு ஷெரீன் வேட்புமனு அளித்தார். இதில் காளியம்மாளின் சொந்த ஊர் நாகப்பட்டினம் ஆகும்.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பார்த்தசாரதி மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட நேற்று வேட்புமனு அளித்தார். மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட சுயேச்சை வேட்பாளர்களும் நேற்று ஆர்வம் காட்டினர். சுயேச்சை வேட்பாளர்கள் எஸ்.பார்த்திபன், கே.ஜெயராமன், எஸ்.பாலு ஆகியோரும் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

இதில் விவசாய தொழில் செய்யும் ஜெயராமன் என்ற வேட்பாளர், வித்தியாசமான முறையில் உடை அணிந்து வந்து டெபாசிட் தொகையை சில்லரை மற்றும் ரூபாய் நோட்டுகளாக செலுத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘என்னிடம் நாணயமும், நியாயமும் இருக்கிறது என்பதை காட்டும் வகையில் நாணயத்தை டெபாசிட் தொகையாக செலுத்த வந்திருக்கிறேன்’ என்றார்.