பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை குறைப்பு


பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை குறைப்பு
x
தினத்தந்தி 23 March 2019 1:06 AM GMT (Updated: 23 March 2019 1:06 AM GMT)

பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 6 காசுகள் குறைந்துள்ளது.

சென்னை,


சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகிறது. 

இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.75.62 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.70.37 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.


Next Story