வேலூர் நாடாளுமன்ற தொகுதி புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் சொத்து மதிப்பு ரூ.191 கோடி


வேலூர் நாடாளுமன்ற தொகுதி புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் சொத்து மதிப்பு ரூ.191 கோடி
x
தினத்தந்தி 24 March 2019 2:00 AM IST (Updated: 24 March 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், அவரது மனைவி லலிதாலட்சுமி ஆகியோர் பெயரில் ரூ.191 கோடி மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலூர், 

அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். அவர் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் ஏ.சி.சண்முகம் பெயரில் மொத்தம் ரூ.28 கோடியே 42 லட்சத்து 18 ஆயிரத்து 320 மதிப்பிலும், அவரது மனைவி லலிதாலட்சும் பெயரில் ரூ.21 கோடியே 14 லட்சத்து 42 ஆயிரத்து 682 மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன.

ஏ.சி.சண்முகம் பெயரில் கையிருப்பு ரூ.8,41,243, வங்கியிருப்பு ரூ.57,68,234, பங்கு பத்திரங்களில் முதலீடு ரூ.23,95,78,036, காப்பீட்டு முதலீடு ரூ.1,30,000, இதர முதலீட்டின் மீதான வருவாய் ரூ.3,12,77,307, நகைகள் ரூ.66,03,500, அவரது மனைவி பெயரில் கையிருப்பு ரூ.8,52,117, வங்கியிருப்பு ரூ.7,55,688, பங்கு பத்திரங்களில் முதலீடு ரூ.16,27,49,967, காப்பீட்டு முதலீடு ரூ.2,97,380, இதர முதலீட்டின் மீதான வருவாய் ரூ.3,63,80,145, நகைகள் ரூ.1,04,07,385 என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.191 கோடி மதிப்பு

விவசாய நிலங்கள் இனங்களில் ஏ.சி.சண்முகம் பெயரில் சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பூர், திருச்சி, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களிலும், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலும் மொத்தம் ரூ.39 கோடியே 80 லட்சத்து 79 ஆயிரத்து 600 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ.26 கோடியே 56 லட்சத்து 30 ஆயிரத்து 138 மதிப்பிலும் அசையா சொத்துகள் உள்ளன.

மேலும், விவசாய நிலங்கள் அல்லாத இனங்களில் ஏ.சி.சண்முகம் பெயரில் மொத்தம் ரூ.41 கோடியே 60 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ.34 கோடியே 67 லட்சத்து 66 ஆயிரத்து 638 மதிப்பிலும் அசையா சொத்துகள் உள்ளன.

இதன்மூலம் ஏ.சி.சண்முகம், அவருடைய மனைவி லலிதா லட்சுமி சண்முகம் ஆகியோர் பெயரில் ரூ.191 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன.

கடன் மதிப்பு

மேலும், ஏ.சி.சண்முகம் பெயரில் ரூ.13 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ.9 கோடியே 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும் கடன் இருப்பதாகவும் அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story