சிவகங்கை மக்களவை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி


சிவகங்கை மக்களவை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி
x
தினத்தந்தி 24 March 2019 6:04 PM IST (Updated: 24 March 2019 6:04 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தனர். சிவகங்கை தொகுதிக்கு மட்டும் காங்கிரஸ் வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார், என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மக்களவை தேர்தலிலும் ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story