அதிமுக - பாமக கூட்டணியில் எந்தவித பேரமும் கிடையாது - ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில்
அதிமுக - பாமக கூட்டணியில் எந்தவித பேரமும் கிடையாது என ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் அளித்துள்ளார்.
சென்னை,
விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தபின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே சண்டை மூட்டிவிட நினைக்கிறார் ப.சிதம்பரம். அதிமுக-பாஜக கூட்டணி பலவீனமான கூட்டணி என்றால் எதிர்க்கட்சிகள் ஏன் அஞ்ச வேண்டும்?
அதிமுக அரசு யாரையும் பழிவாங்க நினைக்காது. பழிவாங்க நினைப்பது ஸ்டாலின் தான். பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதிமுக - பாமக கூட்டணியில் எந்தவித பேரமும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story