தூங்குகிற ஸ்டாலினை எழுப்பினால் என்னை திட்டிக்கொண்டேதான் எழுந்திருப்பார்; முதல் அமைச்சர் பழனிசாமி


தூங்குகிற ஸ்டாலினை எழுப்பினால் என்னை திட்டிக்கொண்டேதான் எழுந்திருப்பார்; முதல் அமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 1 April 2019 9:41 PM IST (Updated: 1 April 2019 9:41 PM IST)
t-max-icont-min-icon

தூங்குகிற ஸ்டாலினை எழுப்பினால் என்னை திட்டிக்கொண்டேதான் எழுந்திருப்பார் என முதல் அமைச்சர் பழனிசாமி பிரசாரத்தின்பொழுது பேசினார்.

சிவகங்கை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவற்றை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.  இதில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச். ராஜா சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவாக முதல் அமைச்சர் பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.  அவர் பேசும்பொழுது, எச். ராஜா கோபக்காரர் தான்.  கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும் என கூறினார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தேர்தல் ஜூரம் வந்து என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி கொண்டிருக்கிறார்.  தூங்கி கொண்டிருக்கும் ஸ்டாலினை எழுப்பினால் என்னை திட்டிக்கொண்டேதான் எழுந்திருப்பார் என கூறியுள்ளார்.

இந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.  இதுபற்றி பேசிய பழனிசாமி, தந்தையே ஒன்றும் செய்யாத போது மகன் கார்த்தி சிதம்பரம் என்ன செய்யப்போகிறார் என கூறினார்.

Next Story